இந்தியாவில் உள்ள 14 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூபாய் 7,183.42 கோடி முதல் தவணையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது 2020-21 முதல் 2025-26 வரையிலான காலத்திற்கு மாநிலத்தின் வருவாய்க்கும், செலவுக்கும் இடையிலான மதிப்பீட்டு இடைவெளி அடிப்படையில் வரி பகிர்வு மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு எவ்வளவு மானியத்தை தகுதியுள்ள மாநிலங்கள் பெற முடியும் ? என்பதனை 15வது நிதிக்குழு முடிவெடுத்துள்ளது.
அதன்படி 15வது நிதிக்குழு ஹிமாச்சல பிரதேசம், மேகாலயம், அசாம், நாகலாந்து, ராஜஸ்தான், திரிபுரா, சிக்கிம், பஞ்சாப், மணிப்பூர், மிசோரம், மேற்கு வங்கம், உத்தரகாண்ட், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு 2022-23 ஆம் நிதியாண்டில் மொத்தம் 86,201 கோடி ரூபாய் மானியம் வழங்க பரிந்துரை செய்துள்ளது. அதில் இந்த 14 மாநிலங்களுக்கும் முதல் தவணையாக ரூபாய் 7,183.42 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.