பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 14-ம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு, பொதுத்தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மதிப்பெண் பட்டியல் வரும் 14-ம் தேதி முதல் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியலை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்களை பெற்றுக்கொள்ள பள்ளிகள் மற்றும் தேர்வு மையத்திற்கு வருகை தரும் தேர்வர்கள் பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க பின்பற்றுதல் வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.