ஓசூரில் திருமணமான 4 ஆண்டுகளில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி சானசந்திரம் பகுதியை சேர்ந்த தனராஜ் என்பவருக்கும் பெங்களூருவை சேர்ந்த ஷாலினி என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் ஷாலினி இரண்டு ஆண்டுகளாக பெங்களூருவில் தனது அம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார் . அதன் பிறகு கடந்த 27ஆம் தேதி மீண்டும் சாணசத்திரம் கிராமத்தில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு வந்து வாழ்ந்து வந்தார்.
மீண்டும் என்ன தகராறு நடந்தது என்று தெரியவில்லை. கணவன் வீட்டிற்கு வந்த 14-வது நாளில் ஷாலினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. திருமணமான நான்கு ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.