தமிழகத்தில் காரைக்கால் மாவட்டத்தின் குழந்தை பாதுகாப்பு அலுவலர் சைமன் ஜார்ஜ், 14 வயதுக்கும் குறைவானவர்கள் வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து காரைக்குடி மாவட்டத்தில் பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட்,ரஸ்க் தயாரிப்பு நிறுவனம், வெல்டிங் கடைகள் மற்றும் ஜவுளி கடைகள் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சைலண்ட் ஜார்ஜ், குழந்தைகள் மற்றும் பெண்கள் தடுப்பு பிரிவு ஆய்வாளர், குழந்தைகள் நலக்குழு தலைவர், தொழிலாளர் நல துறையினர் மற்றும் சைல்டு லைன் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த ஆய்வுக்குப் பிறகு சைமன் ஜார்ஜ் கூறியது, நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பண்டிகை காலங்கள் வருவதால் ஜவுளி மற்றும் மற்ற நிறுவனங்களில் குழந்தைகளை வேலைக்கு ஈடுபடாமல் தடுப்பதற்காகவே இந்த ஆய்வை மேற்கொண்டோம். இந்த ஆய்வின்போது இதுவரை 14 வயதுக்கும் குறைவானவர்கள் வேலைகளின் அமைக்கப்படவில்லை.
மேலும் 14 வயதுக்கு மேலுள்ள 7 குழந்தைகள் மட்டும் கண்டறியப்பட்டு அவர்களை சரியான வேலையில் அமர்த்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 14 வயதிற்கு குறைவான குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துவது கடல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இது குறித்து விழிப்புணர்வு நோட்டிஸ் ஏற்பட்டுள்ளது அவர் தெரிவித்துள்ளார்.