ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகில் புலவன்காசிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் மகள் ஸ்வேகா சாமிநாதன். இவர் அமெரிக்காவின் டெக்ஸ்டெரிட்டி குளோபல் நிறுவனத்தில், தனது 14 வயது முதல் தலைமைத்துவ மேம்பாடு மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டங்களின்கீழ் பயிற்சி பெற்று வந்துள்ளார். அங்கு வழங்கப்பட்ட பயிற்சியாலும் தனது புத்திக் கூர்மையாலும் அங்கு படிக்கும் வாய்ப்பைத் தற்போது பெற்றுள்ளார். மாணவி ஸ்வேகா சாமிநாதன் பல சர்வதேச அளவிலான போட்டிகளில் வென்றுள்ளார். இவற்றைக் கருத்திற்கொண்டு மாணவிக்கு 3 கோடி ரூபாய் உதவித்தொகை கிடைத்துள்ளது.
தனது குடும்பத்திலிருந்து முதல் முறையாக கல்லூரிக்குச் செல்லும் முதல் தலைமுறை பட்டதாரியான ஸ்வேகா சாமிநாதன், தனது இளங்கலை பட்டத்தையே சிகாகோ பல்கலைக்கழகத்தில் பயில இருப்பதன் மூலமாக பல ஏழ்மை நிலையிலும், நடுத்தர வர்க்கத்திலும் இருக்கும் மாணவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளார்.