விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் விஜய்(23), காளிமுத்து(28) ஆகியோர் வருகின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு இருவரும் இணைந்து 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் விஜய் மற்றும் காளிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் விஜய் மற்றும் காளிமுத்து ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், நான்காயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.