14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கணபதி, பிரபு ஆகிய இருவரும் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில் அவரது வீட்டிற்குள் நுழைந்து விட்டனர். இதனையடுத்து கணபதி மற்றும் பிரபு ஆகிய இருவரும் இணைந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் நடந்தவற்றைக் தெரிவித்து கதறி அழுதுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். இதனையடுத்து 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.