Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

14 வயது சிறுமிக்கு பிரசவம்…. போலீசார் அதிரடி நடவடிக்கை…. வாலிபர் கைது….!!

14 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள சங்கிலியன்கோம்பை பகுதியில் 14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளதாக நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையறிந்த அவர் மங்களபுரம் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில்சங்கிலியன்கோம்பையை சேர்ந்த அருள்ராஜ் என்ற வாலிபர் ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இவர்களுக்கு 4 மாத பெண் குழந்தை உள்ளது. எனவே சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக்கிய அருள்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |