Categories
மாநில செய்திகள்

14-வயது சிறுமிக்கு…. வளர்ப்பு தந்தையால் நேர்ந்த கொடூரம்….  நீதிமன்றம் போட்ட அதிரடி  தீர்ப்பு….!!!

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்புத் தந்தைக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய மீன் பிடிக்கும் தொழிலாளி ஒருவர் அப்பகுதியை சேர்ந்த 36 வயதான பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார். அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 14 வயது சிறுமி இருந்த நிலையில் வளர்ப்பு தந்தையான தொழிலாளி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அச்சிறுமி கர்ப்பமானார். இது தொடர்பாக சிறுமியின் தாய் கணவர் மீது அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று மதியம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் மகள் முறையான சிறுமியை கர்ப்பமாக்கிய வளர்ப்புத் தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் 50 ஆயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கனவே 3 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |