திருப்பூரில் 14 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் பேசி திருமணம் செய்துகொண்ட கூலி தொழிலாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கம்பம் அருகே இருக்கின்ற காமயகவுண்டன்பட்டி பகுதியில் விஷ்ணு என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். அவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது மாணவியுடன் ஆசை வார்த்தைகளை பேசி கடத்திச் சென்றுள்ளார். அதன் பிறகு சுருளி அருவி பகுதியில் இருக்கின்ற கைலாசநாதர் கோவிலுக்கு அழைத்துச் சென்று, அந்த சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதுபற்றி அந்த சிறுமியின் பெற்றோர் ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் அவர்களை தீவிரமாக தேடி வந்த போலீஸ், திருப்பூரில் இருவரும் பதுங்கி இருப்பதாக கண்டறிந்தனர். அதன்பிறகு திருப்பூர் விரைந்து சென்ற போலீஸார் இரண்டு பேரையும் கையும் களவுமாக பிடித்தனர். சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த அந்த நபர் மீது போக்கு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் அந்த சிறுமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காப்பகத்தில் ஒப்படைத்தனர்.