திமிங்கல கழிவுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முருங்கப்பாக்கத்தில் திமிங்கலத்தின் கழிவுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திண்டிவனம் காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலின்படி ரோஷனை காவல்துறையினர் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இந்தப் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் திமிங்கல கழிவுகள் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் மோகனரங்கன் என்பவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த 4 மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திமிங்கல எச்சில் அவர்களிடம் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
அதன் மொத்த மதிப்பு 14 1/2 கிலோ இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மோகனரங்கன், சத்தியமூர்த்தி, லட்சுமிபதி, சந்திரசேகர், முருகன் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது மோகனரங்கன் திடீரென அங்கிருந்த பால்கனியில் இருந்து குதித்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால் காவல்துறையினர் மோகனரங்கனை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதன்பிறகு அவர்கள் 5 பேரையும் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.