Categories
தேசிய செய்திகள்

பீகாரில் மூளை காய்ச்சலால் 14 குழந்தைகள் பலி…!!

பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சல் பாதிப்பால் 14 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது 

பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் 38 குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டது. கண்டறியப்பட்ட 38 குழந்தைகளும் முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி 14 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் மற்ற குழந்தைகள் தனி வார்டில் வைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Image result for Muzaffarpur: 14 children dieபலியான பெரும்பாலான குழந்தைகளுக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்ததாக, முசாபர்பூர் சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் இருப்பது தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |