Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

14 கல்லூரி….. 150 மாணவர்கள்….. 2 நாள்….. மாநில அளவில் நீச்சல் போட்டி….!!

விருதுநகரில் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் நீச்சல் போட்டி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் தொடங்கின.இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நீச்சல் போட்டியில்,

Image result for swimming competition

மதுரை, தஞ்சாவூர், திருச்சி, சென்னை, சிதம்பரம் உள்ளிட்ட 14 கல்லூரிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக இரண்டு நாட்கள் நடைபெற்று வரும் இந்த நீச்சல் போட்டியில், இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |