Categories
மாநில செய்திகள்

14 நாட்கள் ஊரடங்கின் பயன்… அடுத்த வாரம் தெரியவரும்…!!

தமிழகத்தில் 14 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் பலன் அடுத்த ஒரு வாரத்தில் தெரியவரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியில் வர வேண்டும் என்று எச்சரித்துள்ளது. இந்நிலையில் 14 நாட்கள் முழு ஊரடங்கின் பயன் அடுத்த ஒரு வாரத்தில் தெரியவரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:” தமிழகத்தில் கடும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்களுக்கான அத்தியாவசிய தேவைகள், உதவிகளை உடனே அரசு பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் அவர் தெரிவித்தார். மக்கள் அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி நடந்து வந்தால் அதற்கான பலனை நாம் கூடிய விரைவில் அடைவோம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.

Categories

Tech |