விஜய் சேதுபதி, வெற்றி மாறன் உள்ளிட்ட 67 நட்சத்திரங்கள் திமுக தலைவர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து வரும் மே 7-ஆம் தேதி திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இதனால் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திரை பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் சேதுபதி,வெற்றி மாறன் உள்ளிட்ட 67 பேர் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பி அதனோடு தங்களது கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.
அதன்படி, தூத்துக்குடி ஸ்டெர்லைட், எட்டு வழி சாலை, கூடங்குளம் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை அதில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த கோரிக்கைகளை கூடிய விரைவில் நிறைவேற்றும் படி விஜய் சேதுபதி, வெற்றி மாறன் உள்ளிட்ட 67 பேர் கையொப்பமிட்டு அக்கடிதத்தை அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.