தோட்டத்தில் பதுங்கி இருந்த மலைப்பாம்பை பிடித்து வனத்துரையினரிடம் ஒப்படைத்து விட்டனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள பெருமாள்பட்டி பகுதியில் விவசாயியான பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பாண்டி வனப்பகுதிக்கு அருகில் இருக்கும் தனது தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாண்டி சிவாலயம் திருப்பணி குழு நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
வந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிவாலயம் திருப்பணி குழு நண்பர்கள் சுமார் 14 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து விட்டனர். அதன்பிறகு அவர்கள் வனத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்ட பாம்பை ஒப்படைத்து விட்டனர்.