14 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டிருப்பதாக முகாமை ஆய்வு செய்த கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் மூன்றாவது கொரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு உத்தரவின் பேரில் மாவட்டத்தில் மாபெரும் தடுப்பூசி முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது நான்காவது கட்ட தடுப்பூசி முகாம் தீவிரமாக நடைபெற 739 தடுப்புசி மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.
அதன்பின் புனித வளனார் கல்லூரி வளாகம் மற்றும் நகராட்சி பள்ளி ஆகிய இடங்களில் நடந்த முகாமை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பொதுமக்களிடம் நீங்கள் தடுப்புசி போடுவதோடு அருகில் உள்ளவர்களிடமும் இதை தெரிவித்து அவர்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து கலெக்டர் நிபுணர்களிடம் கூறியதாவது, தமிழகம் முழுவதும் மாபெரும் கொரோனா தடுப்பூசிகளின் முகாம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த மாபெரும் முகாம் 700-க்கும் அதிகமான இடங்களில் நடைபெற்று வருகின்றது. இவற்றில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் இம்மாவட்டத்தில் இதுவரை 14,00,000 நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கிறது. மேலும் மீதமிருக்கும் 7 லட்சம் நபர்களுக்கு விரைவில் தடுப்பூசி போடப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.