உக்ரைன் நாட்டில் போர் தொடங்கியதிலிருந்து ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை ஐ.நா வெளியிட்டுள்ளது.
உலக நாடுகளில் மொத்தமாக சுமார் பத்து கோடிக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக உள்ளார்கள் என்று கூறிய ஐ.நா அகதிகளுக்கான உயர் ஆணையராக இருக்கும் பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார். நேற்று நடந்த ஐ.நா கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது, கடந்த பிப்ரவரி மாதத்தில் உக்ரைனில் போர் தொடங்கியது.
அப்போதிலிருந்து தற்போது வரை சுமார், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 14 மில்லியன் மக்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இவ்வாறு அதிகபட்ச மக்கள் இடம் பெயர்வது இதுதான் முதல் தடவையாகும். மேலும், உக்ரைன் மக்கள் உலகிலேயே மிகவும் கொடிய குளிர் காலத்தை இந்த வருடத்தில் தான் சந்திக்க இருக்கிறார்கள்.
உக்ரைன் நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதில் எங்களின் கவனம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் பக்கத்து நாடான மோல்டோவாவில் சிறப்பாக கவனம் தேவைப்படுகிறது. உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்புகளில் அதிகமாக தாக்குதல் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, மனிதாபிமான நிறுவனங்கள் செய்யும் உதவி பெருங்கடலில் சிறு துளி போல உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.