கர்நாடகாவை சேர்ந்த மேலும் 14 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்
கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கூட்டணி அரசு தோல்வியடைந்து கவிழ்ந்தது. இதையடுத்து குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்த பின், கர்நாடக பாஜக ஆட்சியமைக்க உரிமை கோர ஆளுநர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தற்போது கர்நாடக முதல்வராக இருக்கும் எடியூரப்பா நாளை நடைபெறும் கர்நாடக சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார்.