Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கடலூரில் 14 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி… சுயதனிமையில் 124 பெண் காவலர்கள்!!

கடலூர் காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சிக்கு வந்த 14 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பெண் காவலர்கள் உட்பட 14 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பயிற்சியில் உள்ள 124 பெண் காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து கடலூர் காவலர் பயிற்சிப் பள்ளி மூடப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 395 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தை சென்று திரும்பியுள்ளனர். இதுவரை 27 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 409 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 381 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று வரை 8,002 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 53 பேர் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 2,051 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |