Categories
உலக செய்திகள்

14 ரஷ்ய நிறுவனங்களின் மீது பொருளாதார தடை…. ஆஸ்திரேலிய அரசு அறிவிப்பு…!!!

ரஷ்ய நாட்டிற்குரிய 14 நிறுவனங்களின் மீது பொருளாதார தடை அறிவிப்பதாக ஆஸ்திரேலியா தெரிவித்திருக்கிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று போர்தொடுக்க தொடங்கியது. எனவே ரஷ்ய நாட்டின் மீது பல நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்திருக்கின்றன.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான பேய்ன், தங்கள் நாட்டில் இருக்கும் ரஷ்ய நாட்டிற்குரிய பாதுகாப்பு துறைக்கான போக்குவரத்து நிறுவனம், கப்பல் கட்டும் நிறுவனம் போன்ற 14 நிறுவனங்களின் மீது பொருளாதார தடை அறிவிக்கப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.

மேலும் இந்தப் பட்டியலில் ரஷ்ய நாட்டின் மின் சாதன பொருட்களுக்குரிய பாகங்களை தயாரிக்கக்கூடிய முக்கிய நிறுவனமாக விளங்கும் ரஸ்எலக்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனமும் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |