Categories
தேசிய செய்திகள்

டெல்லியின் புறநகர் பகுதிகளில் 2 மாதங்களில் 14 நில அதிர்வுகள் – நடுங்கும் தலைநகர்!

டெல்லியின் புறநகர் பகுதிகளில் 2 மாதங்களில் 14 நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த 14 அதிர்வுகளில் 2 மட்டும் தான் ரிக்டர் அளவில் 3.5 புள்ளிகளுக்கும் மேல் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் பள்ளத்தாக்கு மற்றும் பிளவுகளில் ஏற்படுகின்றன என நில அதிர்வு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு டெல்லி இமயமலை தொடரில் வரும் நிலையில் இந்திய தட்டு, யுரேஷிய தட்டுகளுக்கு கீழ் வருவதால் நில அதிர்வு இந்த பகுதியில் அதிகம் என புவியியல் வல்லுநர்கள் தகவல் அளித்துள்ளனர்.

இந்த சிறு நில அதிர்வுகளை கண்காணிப்பது மூலம் பூமிக்கு அடியில் எந்த அளவு எரிசக்தி ஆற்றல் உள்ளது, அது எந்த அளவுக்கு வெளியேற்றப்படுகிறது என்பதனையும் அறிய முடிகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இமயமலை பகுதி ரிக்டர் அளவின் 8 புள்ளிகளாக பதிவாகும் மிக பெரிய ஏற்பட ஏதுவான பகுதி என்றும் பூமிக்கு அடியில் எப்போது வேண்டுமானாலும் எதுவாயினும் நடைபெறும் என்பதால் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் டெல்லியில் தொடர் நில அதிர்வுகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Categories

Tech |