Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

14 வகை ரேஷன் பொருட்கள் இதுதான்…. படிச்சு தெரிஞ்சுகோங்க…. அதிகாரிகளின் தகவல்….!!

14 வகை பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் இன்றுடன் முடிவடைகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ உப்பு, 1 கிலோ கோதுமை மாவு, அரை கிலோ சர்க்கரை, 1 கிலோ ரவை, அரை கிலோ உளுந்தம் பருப்பு, கால் கிலோ கடலை பருப்பு, கால் கிலோ புளி, 200 கிராம் டீ தூள், 100 கிராம் கடுகு, 100 கிராம் சீரகம், 100 கிராம் மிளகாய்த்தூள், 100 கிராம் மஞ்சள் தூள், 1 குளியல் சோப், 1 துணி துவைக்கும் சோப் ஆகிய 14 வகை பொருட்கள் நிவாரண பொருட்களாக அரசு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னையில் கடந்த 3-ஆம் தேதி இத்திட்டத்தை முதல்வர் முக. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

இதனையடுத்து மற்ற மாவட்டங்களில் வருகின்ற செவ்வாய்க்கிழமை முதல் ரேஷன் கடைகள் மூலம் இந்த பொருட்கள் வழங்கப்பட இருக்கின்றது. அந்தவகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,254 ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் 5 லட்சத்து 93 ஆயிரத்து 363 நபர்களுக்கு 14 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கப்படுகின்றது. இந்தப் பொருட்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு குடோனுக்கு வந்து இறங்கியது.

இந்தப் பொருட்கள் விழுப்புரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக குடோனில் இருந்து அந்தந்த ரேஷன் கடைகளுக்கு மினி லாரி, சரக்கு வாகனம், லாரி போன்ற வாகனங்கள் மூலம் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த பணியினை மாவட்ட வழங்கல் அலுவலர் அறிவுடைநம்பி, பறக்கும் படை தனி  தாசில்தார் வேல்முருகன், குடிமைப்பொருள் தனி தாசில்தார் கோவிந்தராஜ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியபோது 14 வகை பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் இன்றுடன் முடிவடைகிறது. அதன்பிறகு ரேஷன் கடை ஊழியர்கள் அந்த பொருட்களை ஒரே தொகுப்பாக ஒரு பையில் போட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்குவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |