Categories
கிரிக்கெட் விளையாட்டு

14 வருஷ ஐபில் போட்டில்… ‘இப்படி ஒரு சாதனையை யாருமே பண்ணல’…! “தோற்ற மேட்சிலும் சாதனை படைத்த சிஎஸ்கே” …!!!

நேற்று நடந்த மும்பைக்கு எதிரான போட்டியில்,ஐபில் வரலாற்றிலேயே சிஎஸ்கே அணி     புதிய சாதனை படைத்துள்ளது.

நேற்று டெல்லியில் நடைபெற்ற 27 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் பரபரப்பான இறுதிகட்டத்தில் ,மும்பை இந்தியன்ஸ் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி, மும்பை அணி வெற்றி பெற்றது. இதில் முதல் இன்னிங்சில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ், நேற்றைய போட்டியில் புதிய சாதனையை படைத்துள்ளது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் , 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய மொயின் அலி – டு பிளசிஸ்  பார்ட்னர்ஷிப்  அதிரடி ஆட்டத்தை காட்டியது .இருவரும் இணைந்து, 58 பந்துகளில்103 ரன்களை குவித்து இருந்தது.

இதில் மொயின் அலி ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னாவும் ஆட்டமிழந்தார். இதனால் சென்னை அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்ததாக களமிறங்கிய அம்பத்தி ராயுடு, ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரின் பார்ட்னர்ஷிப் இறுதி வரை ஆட்டமிழக்காமல், 49 பந்துகளில் 102  ரன்களை எடுத்து, சிஎஸ்கே அணி 218 ரன்களை குவிக்க உதவியாக இருந்தது. இதனால் கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டிகளில், ஒரே போட்டியில் 2  பார்ட்னர்ஷிப், 100 ரன்களை எடுத்ததில்லை . இதனால் நேற்றைய போட்டியின் மூலம் , ஐபிஎல் வரலாற்றிலேயே          2 பார்ட்னர்ஷிப்  அமைத்து 100 ரன்களை எடுத்த முதல் அணி ,என்ற சாதனையை சிஎஸ்கே அணி படைத்துள்ளது.

Categories

Tech |