14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை ஆசை வார்த்தைகளைக் கூறி காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் வைத்து மூர்த்தி சிறுமியை திருமணம் செய்துள்ளார். அதன்பின் தனது வீட்டிற்கு அழைத்து சென்று சிறுமியை மூர்த்தி கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் அந்த சிறுமி கர்ப்பமாகி உள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் கடந்த மாதம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துர்க்காதேவி போக்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் அனைத்து மகளிர் காவல்துறையினர் மூர்த்தியை கைது செய்தனர்.