தலிபான்களின் பயங்கர திட்டத்திலிருந்து, ஒரு வழியாக தப்பி தன் 14 வயதில் பிரிட்டன் வந்த இளைஞர், 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மரண பீதியில் இருக்கிறார்.
ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து தப்பி, 10 வருடத்திற்கு முன் பிரிட்டன் வந்த சஜித் என்பவரின், புகலிட கோரிக்கை தற்போது வரை பிரிட்டன் அரசால் ஏற்கப்படவில்லை. இந்நிலையில், தன்னை மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் இருக்கிறார் சஜித். இவர், தன் 13 வயதில் ஆப்கானிஸ்தானில் ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார்.
அப்போது, ஒரு நாள் இவரின் பள்ளிக்கு தலீபான்கள் வந்துள்ளனனர். அவர்கள் அதிக புத்திசாலியாக இருக்கும் மாணவர்கள் அமைப்பை தங்களின் பயிற்சி மையத்திற்கு அனுப்பி வைக்குமாறு கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். மேலும், அவர்களின் உயர் படிப்பிற்கான உதவிகள் அனைத்தையும் செய்கிறோம் என்றும் கூறியுள்ளார்கள்.
அதன் பின்பு தான் அவர்களின் சுயரூபம் தெரிந்துள்ளது. அதாவது, சஜித் உட்பட அவர்களுடன் சென்ற மாணவர்களை தற்கொலை படையாக மாற்ற பயிற்சி அளித்திருக்கிறார்கள். மேலும், இங்கிருந்து தப்பினால், உங்கள் குடும்பத்தையே கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த மிரட்டலுக்கு பயப்படாத சஜித். அவர்களிடமிருந்து, தப்பி தந்தையின் உதவியுடன் பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துவிட்டார்.
அதன்பின்பு, செஞ்சிலுவை சங்கத்தின் உதவியால் பெற்றோரை தேடியிருக்கிறார். எனினும், ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. மேலும் பத்து வருடங்கள் கடந்தும் புகலிட கோரிக்கை, ஏற்கப்படவில்லை. எனவே தன்னை மீண்டும் தலீபான்களிடம் ஒப்படைத்து விடுவார்கள் என்று கூறி கண்கலங்கினார் சஜித். மேலும், ஆப்கானிஸ்தானில் தனக்கு யாரும் இல்லை என்று தெரிவித்தும், பிரிட்டன் அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார்.
தற்போது, தெற்கு லண்டனில் வாழ்ந்துவரும் சஜித், தகுந்த பணிக்கும் செல்ல முடியாமல் தவித்து வருவதாக கூறியிருக்கிறார். ஆனால் மீண்டும் ஆப்கானிஸ்தான் சென்றால், தன்னை கட்டாயம் கொன்றுவிடுவார்கள் என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.