Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பாலியல் தொழில்” நண்பனை நம்பி மோசம் போன….. 14 வயது சிறுமி….. வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு….!!

சென்னை அருகே 14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த கடத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை அருகம் பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தின் பின்புறம் 14 வயது சிறுமி ஒருவர் கார் ஒன்றில் வாலிபருடன் அமர்ந்திருந்தார். அப்போது அவ்வழியாக மினி வேன் ஒன்றில் வந்த வாலிபர் ஒருவர் சிறுமியை கண்டு எங்கோ பார்த்தது போல் இருக்கிறார் என்று இறங்கி பார்த்துள்ளார். அப்போது தான் தெரிந்தது அது அவரது உறவினர் என்று.

இதையடுத்து வாலிபரிடம் விசாரிக்கையில், சிறுமியை பணம் கொடுத்து அழைத்து வந்துள்ளதாகவும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்த உள்ளதாகவும் தெரிவிக்க அவரோடு மினி வேன் டிரைவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை அப்பகுதி வழியாக வந்த காவல்துறையினர் கண்டு  கூச்சலிட்டு இருவரையும் அழைக்க சிறுமியுடன் அமர்ந்திருந்த வாலிபர் காவல்துறை அதிகாரியை கண்டதும் பயந்து தப்பி ஓடிவிட்டார்.

பின் சிறுமி அமர்ந்திருந்த காரில் உள்ள டிரைவர் மற்றும் அதிகாரிகளிடம் சிக்கினார். அவரிடம் தனியாக ஒருபுறம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வர சிறுமியிடம் விசாரித்தபோது தன்னை அழைத்து வந்தவர் என்னுடைய நெருங்கிய ஆண் நண்பர் என்று சிறுமி தெரிவித்தார். இதையடுத்து தப்பியோடிய நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிறுமி பாலியல் தொழிலுக்காக கடத்தி வரப்பட்டு வசியம் செய்யப்பட்டாரா ? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |