பிரபல பாலுவுட் நடிகை சுஷ்மிதா சென் தன்னைவிட 14 வயது இளையவரை மணக்க இருக்கிறார்.
அழகி போட்டியில் பங்கேற்று மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற சுஷ்மிதா சென் தமிழ் இந்தி உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரட்சகன் படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாகவும் முதல்வன் படத்தில் ஷகலக பேபி பாடலுக்கு நடனம் ஆடியும் பிரபலமடைந்தார். நடிப்பைத் தவிர பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார். தற்போது 42 வயது ஆகும் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் இரண்டு வருடங்களாக காதலித்துவந்த பிரபல விளம்பர மாடலுமான, தன் நணபருமான ரோமன் ஷாலை(27) திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். இவர்களது திருமணம் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளதாகவும் இதற்கு சுஷ்மிதாவின் மகள்கள் இருவரும் சம்மதம் கூறிவிட்டதாகவும் சுஷ்மிதா சென் கூறியுள்ளார்.