Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்த கல்யாணம் நடக்க கூடாது… தப்பி ஓடிய மணமகன் குடும்பத்தினர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

14 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் பகுதியில் அயூப் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இந்த வாலிபருக்கும், அவரது உறவினர் பெண்ணான 14 வயது சிறுமிக்கும் திருமணம் நடத்த பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது காவல்துறையினரை பார்த்ததும் மணமகன் வீட்டார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அங்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணமகன் குடும்பத்தினரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |