Categories
தேசிய செய்திகள்

140 பேரை பலி கொண்ட பாலம்…. அறுந்து விழும் சிசிடிவி காட்சி…. பதைபதைக்க வைக்கும் வீடியோ….!!!

குஜராத் மாநிலம் மோர்ஹி பகுதியில் மச்சு ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த ஆற்றைக் கடக்க அப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்குள்ள கேபிள் பாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வழக்கம் போல நேற்று மாலையும் நூற்றுக்கணக்கானோர் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.அந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 140 ஐ கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சிக்கிய 177 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பாலம் அறுந்து விழும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |