Categories
மாநில செய்திகள்

சென்னையில் 140 சோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

சென்னை புளியந்தோப்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பங்கேற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சென்னையில் 140 சோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார். நோய் தொற்று அதிகம் உள்ள இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுகின்றன, நோய் தொற்று அதிகம் உள்ள 200 இடங்களை கண்டறிந்து சோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

ஒரு வார்டுக்கு 2 முதல் 4 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஒரே நாளில் 519 முகாம்கள் மூலம் 38,000 பேருக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சல் முகாம்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடக்கின்றன என்றும் கொரோனா பணிகள் அல்லாமல் வழக்கமான பணிகளும் நடந்து வருகின்றன என்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். மேலும் சென்னை மாநகரில் கொரோனா பாதிப்பு விகிதம் 18%ஆக உள்ளது

Categories

Tech |