சாராயம் காய்ச்சுவதற்காக ஊறலை பதுக்கி வைத்திருந்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முண்டியூர் பகுதியில் இருக்கும் ஓடையில் மர்ம நபர் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறலை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது 1400 லிட்டர் சாராய ஊறலை பதுக்கி வைத்து இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் பின் அவற்றை தரையில் கொட்டி காவல்துறையினர் அழித்துள்ளனர். இதனையடுத்து இது குறித்து அதே பகுதியில் வசிக்கும் சீனிவாசன் என்பவரின் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.