பிஸ்கட் நிறுவனத்தில் 1,40,000 ரூபாயை கொள்ளையடித்து சென்றவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் ஒரு பகுதியில் பிஸ்கட்கள் விற்பனை செய்கின்ற நிறுவனம் அமைந்திருக்கின்றது. இந்நிலையில் இரவு நேரத்தில் நிறுவனத்தின் பின்புறத்தில் அமைந்திருக்கும் ஜன்னல் கம்பிகளை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று அங்கிருந்த 1, 40, 000 ரூபாயை திருடி சென்றுள்ளனர்.
இதனையடுத்து நிறுவனத்தின் உரிமையாளர் சந்தோஷ்குமார் இம்மாவட்டத்தின் காவல் நிலையத்தில் சென்று புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.