சென்னையில் இன்று ஒரே நாளில் 1,407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 27,398 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று பாதிப்பு விகிதம் 70.80% ஆக உள்ளது. சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக 906 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதுவே மே மாதம் மொத்த பாதிப்புகள் 14,802 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் ஜூன் மாதத்தில் இதுவரை 11,690 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று மட்டும் தமிழகத்தில் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 12வது நாளாக தமிழகத்தில் பாதிப்புகளின் எண்ணிக்கை 1,000த்தை கடந்துள்ளது. இந்த நிலையில், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை கடந்து 38,716 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கொரோனா உறுதியானவர்களில் ஆண்கள் 1,153, மற்றும் பெண்கள் 722 ஆகும். இதுவரை தமிழகத்தில் 23,981 ஆண்களும், 14,718 பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.