தந்தை பெரியாரின் 141 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
தமிழகத்தில் இன்று தந்தை பெரியாரின் 141 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவருடைய திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் இருக்க கூடிய பல்வேறு முக்கிய இடங்களில் தமிழக அரசு சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.
அதன்படி சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள பெரியாரின் திருவுருவப் படத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அமைச்சர் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.