தெலுங்கானாவில் 143 தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வரும் பெண் ஒருவர் புஞ்சகுட்டா காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில்”கடந்த 2010ஆம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. திருமணமான ஒரு வருடத்திற்குள் விவாகரத்து ஆகிவிட்டது. விவாகரத்தான எனது கணவரின் குடும்பத்தில் இருக்கின்ற சில உறுப்பினர்கள் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் என்னை 143 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்” என்று அவர் கூறியுள்ளார். அந்தப் புகாரை தொடர்ந்து காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் 42 பக்கம் வழக்கு போடப்பட்டுள்ளது. அதில் 41 பக்கங்களில் 143 பேரின் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்களில் சில பெண்களும் இடம்பெற்றுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அந்தப் பெண் அளித்த புகாரில், அரசியல் பின்னணி உள்ளவர்கள், மாணவர் தலைவர்கள், ஊடகத்தை சேர்ந்தவர்கள், திரைப்படம் மற்றும் பிற தொழில்களை சார்ந்தவர்கள் என பல்வேறு பிரபலங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ” பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரை தொடர்ந்து நாங்கள் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். அதே சமயத்தில் குற்றவாளிகளையும் விசாரித்துக் கொண்டிருக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.