143 பொருட்களுக்கான ஜி எஸ் டி வரியை உயர்த்த ஜி.எஸ்.டி கவுன்சில் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்பளம், வெல்லம், சாக்லேட், கலர் டிவி, பவர் பேங்க் கடிகாரம், சூட்கேஸ், கைப்பை, குளிர்பானங்கள், துணி வகைகள் , தோல் பொருட்கள், கண்ணாடி பிரேம்கள், உள்ளிட்டவற்றுக்கு ஜி.எஸ்.டி.யை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலைகள் உயர்ந்துவரும் நிலையில் ஜி எஸ் டி வரியையும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.