Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“144 தடை உத்தரவு அமல்” தென்காசி மாவட்ட கலெக்டர் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பச்சேரி கிராமத்தில் நாளை ஒண்டிவீரன் 251-வது வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் செப்டம்பர் 1-ஆம் தேதி நெற்கட்டும் செவல் கிராமத்தில் மாவீரன் புலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெறும். இதில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த தென்காசி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்வர். இந்நிலையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் செப்டம்பர் 2-ஆம் தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே சமூக இடைவெளியை பின்பற்றி 4 நபர்கள் வீதம் மரியாதை செலுத்த முழு ஒத்துழைப்பு தருமாறு தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |