புதுச்சேரியில் இன்று மாலை வரை நீடிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான நிவர் புயல் தீவிரமடையும் என்பதால் புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது இன்று அதிகாலை புயல் கரையை கடந்த போதிலும், புதுச்சேரியில் புயல் எதிரொலியாக விதிக்கப்பட்டிருந்த 104 தடை உத்தரவை இன்று மாலை 6 மணி வரையில் நீட்டிக்க படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருவதால் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் தண்ணீர் தேங்கி, மரம் விழுந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருப்பதால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணி வரை நீட்டிக்க படுவதாக அறிவிக்கப் பட்டிருந்த தடை உத்தரவை திடீரென சற்றுமுன் அரசு திரும்பப் பெற்றது. அதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சுடன் வெளியே வர தொடங்கியுள்ளது.