தமிழகத்தில் மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது . சிவகங்கை, தேவகோட்டை, இளையாங்குடி, மானாமதுரை, காளையார்கோவில், திருப்புவனம் தாலுகாவில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மருது சகோதரர்களின் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அந்த மாவட்டத்தில் அக்டோபர் 21ம் முதல் வருகின்ற 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது நாளை மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.