Categories
தேசிய செய்திகள்

144 தடை உத்தரவு….. மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு…. இணைய சேவை முடக்கம்….. பரபரப்பு…..!!!!

மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் பகுதியில் வேன் ஒன்றுக்கு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த 4 பேர் தீ வைத்து எரித்தனர். அதில் மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் வெடித்த கலவரம் ஜாதி கலவரமாக மாறி மாநில முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் சிக்கலான சூழ்நிலையை தவிர்க்கும் விதமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு மாநிலம் முழுவதும் இணைய சேவைகள் மற்றும் செல்போன் சேவைகள் துண்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

சில சமூக விரோதிகள் சமூக ஊடகங்களை பயன்படுத்தி பொதுமக்களின் உணர்வுகளை தூண்டும் விதமாக வெறுப்பு பேச்சுகளை பரப்புகின்றனர்.இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |