காவல்துறையினரின் கண்காணிப்பின் கீழ் விவசாயிகள் நெல்லை விதைத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மேல்பருத்திகுடி கிராமம் அமைந்துள்ளது. இங்கு விவசாயிகள் குருவை சாகுபடிக்காக நேரடி நெல் விதைப்பு செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். இதற்கு விவசாய கூலி தொழிலாளர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 27-ஆம் தேதி விவசாயிகள் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது கூலி தொழிலாளர்கள் தகராறு செய்துள்ளனர். இதை தெரிந்து கொண்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 39 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் விவசாயிகள் வயலில் நேரடியாக நெல் விதைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். இதனால் பிரச்சனை எதுவும் ஏற்படாமல் தடுப்பதற்காக உதவி மாவட்ட ஆட்சியர் யுரேகா 144 தடை உத்தரவை பிறப்பித்தார். இதனையடுத்து காவல்துறையினரின் கண்காணிப்பின் கீழ் விவசாயிகள் வயலில் நேரடியாக நெல்லை விதைத்தனர். மேலும் 144 தடை உத்தரவின் காரணமாக அப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.