ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு வெளி மாவட்டத்தில் இருந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வாடகை வாகனங்களில் வரக்கூடாது. 5 பேருக்கு மேல் கூடக்கூடாது. முளைப்பாரி ஜோதி ஓட்டம், ஊர்வலம் மற்றும் பேரணிக்கு தடை. அரசியல் கட்சிகளுக்கு அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
Categories