ஊரடங்கு உத்தரவு நிலுவையில் உள்ள இந்த சமயத்தில் கன்டெய்னர் லாரி மூலம் சொந்த மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட 300 தொழிலாளர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
கொரோனா பாதிப்பால் ஏப்ரல் 14 முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் சொந்த ஊருக்கு செல்ல நினைப்போர் செல்ல முடியாதபடி போக்குவரத்து முற்றிலுமாக மாவட்ட மாநில எல்லைகளுக்கு இடையே தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா,
மகாராஷ்டிரா மாநில எல்லைகளுக்கிடையே ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. அது என்னவென்றால் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ராஜஸ்தான் நோக்கி வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் ஒரே கன்டெய்னரில் ஒளிந்து கொண்டு பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிக்க அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து அவர்களை விசாரித்ததில், போக்குவரத்து தடைபட்டதால் இம்முறையை கையாண்டோம் என வருத்தத்துடன் தெரிவித்தனர். இதையடுத்து கண்டைனர் லாரி டிரைவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு தொழிலாளிகள் பாதுகாப்பான இடத்தில் தனிமைப்படுத்த கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.