Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

144…. ஆம்புலன்ஸ் செல்ல தடை….. 1 மணி நேரம் தாமதம்…… சமூக ஆர்வலர்கள் ஆவேசம்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அம்புலன்ஸ் தடையின்றி செல்ல தடுப்பு கம்புகளை அகற்றுமாறு சமூகஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். நாடு முழுவதும் முழுவதும் கொரோனாவிற்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில்,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் இருக்கும் தெருக்களிலும் அந்த தெருவை சுற்றியுள்ள பகுதிகளிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு ஒரு சிறிய கதவின் வழியே உரிய காரணத்துடன் வந்தால் மட்டுமே மக்கள் வெளியே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இவ்வாறு இருக்கையில் யாரேனும் நபருக்கு அந்த பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு,

அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டால் அந்த தடுப்புகளை அகற்றி ஒரு மணி நேரத்திற்கு பின்பே தாமதமாக அந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிகிறது. இதனால் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகவே தடுப்புகளை அகற்றி ஆம்புலன்ஸ் தடையில்லாமல் செல்ல வழிவகுக்குமாறும், கொரோனாவை தடுக்க வேறு ஏதேனும் வழிகளில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சமூக ஆர்வலர்கள்  மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |