Categories
மாநில செய்திகள்

சென்னையில் 144 தடை உத்தரவை மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு – காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!

மார்ச் காலை 6 மணி முதல் ஏப்ரல் 1ம் தேதி காலை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 144 தடை உத்தரவை ஏப்., 14ம் தேதி வரை நீடித்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை நகருக்குள் காரணமின்றி சுற்றி திரியும் வாகனங்களை தடுக்க காவல்துறை தீவிரப்பணியில் ஈடுபட்டுள்ளது. நகரில் உள்ள 169 சோதனை சாவடிகளில் வாகனங்களின் எண், பெயர்களை போலீசார் பதிவு செய்துள்ளனர். முன்னதாக சென்னை பாடி மேம்பாலத்தில் கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மேம்பாலத்தின் 3 புறமும் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வாகனங்கள் வரிசை கட்டி நின்றதால் பதற்றம் நிலவிய நிலையில் வாகனங்கள் போக்குவரத்தை தடுக்க காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |