நாடு தழுவிய ஊரடங்கால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தமிழர்கள் 46 பேர் தவித்து வருகின்றனர். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த 46 பேர் உணவின்றி தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கால் வெளியே செல்லமுடியாமல், உணவு கிடைக்காமல் தவிப்பதாக அங்கு சிக்கியுள்ள தமிழர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ் சங்கம் தினமும் அளித்த உணவை தடுத்து நிறுத்தி விட்டதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் தலையிட்டு தங்களுக்கு உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிலையில், 200க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கித்தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகில் 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் குறைக்கவும், தடுக்கவும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து அமலில் உள்ளது. இந்த நிலையில், வெவ்வேறு மாநிலங்களுக்கு புலப்பெயர்ந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிவருகின்றனர். போக்குவரத்துக்கு முடக்கப்படகால் நடந்தே தங்களது மாநிலங்களுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.