144 தடையை மீறி கிரிக்கெட் விளையாடிய வாலிபர்களை காவல்துறையினர் குட்டிகரணம் போட வைத்தனர்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அதனை கடைப்பிடித்து வரும் இந்த சூழ்நிலையில், வெளியே சுற்றி வரும் மக்களுக்கு ஆங்காங்கே காவல்துறையினர் நூதன முறையில் தண்டனை அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதி அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை குட்டிகரணம் அடிக்கவைத்து காவல்துறையினர் நூதன முறையில் தண்டனை வழங்கினர்.