Categories
சென்னை மாநில செய்திகள்

144….. அச்சம் வேண்டாம்….. காய்கறி வீட்டிற்கே வரும்….. ஆர்டர் பண்ணா போதும்…. ஆணையர் அறிவிப்பு….!!

சென்னை ஆவடியில் காய்கறிகள் வீட்டிற்க்கே லெலிவரி செய்யப்படும் என ஆணையர் தெரிவித்துள்ளார்.

 கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக 144 தடை உத்தரவை நாடு முழுவதும் பாரதப்பிரதமர் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். அதன்படி, பொதுமக்கள் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தங்களது வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றன. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில்,

அப்போதும் வெளியில் சென்று வரும்போது ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் அனைத்து மக்களின் மனதிலும் எழுந்துள்ளது. அந்த வகையில் ஆவடி மாநகராட்சி ஆணையர் அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார். அதில்,

ஆவடியில் உள்ள 48 வார்டுகளிலும் மக்கள் தங்களுக்கு வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை போன் மூலம் ஆர்டர் செய்யலாம் அப்படி போன் மூலம் ஆர்டர் செய்த பின் அவரவர் வீட்டிற்கு காய்கறி கொண்டு  வந்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மக்கள் தங்கள் அருகில் உள்ள கடைகளில் மொபைல் எண்களை வாங்கி வைத்துக்கொண்டு காய்கறிகள் தேவைப்படும் போது கால் செய்தால் அவர்கள் உடனடியாக உங்களுக்கு வீட்டில் வந்து காய்கறிகளை டெலிவரி செய்வார்கள் என்று ஆணையர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |