திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தியவர்களில் ஐந்துபேர் 144 தடையை மீறி ஊர் சுற்றி வந்ததால் அவர்கள் மீது அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா பல்வேறு உயிர்களை பலி வாங்கி வருகிறது. அந்த வகையில், இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் அதிகரிக்க 600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடைய தாக்கம் மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்காக ஏப்ரல் 14 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு 605 பேர் வெளிநாடுகளில் வேலை பார்த்தவர்கள் மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பி உள்ளனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அவர்களது வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அவர்கள் தனிமையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் அரசின் உத்தரவை மதிக்காமல் 144 தடையை மீறி தனிமைப்படுத்தபட்டவர்களில் ஐந்து பேர் வெளியில் சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது. அவர்கள் 5 பேர் மீதும் காவல்துறையினர் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.